சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்
மைதா- 100 கிராம்
வெண்ணை-75 கிராம்
சர்க்கரை- 75 கிராம்
பேக்கிங் பவுடர்- அரை தேக்கரண்டி
முட்டை -இரண்டு
வெண்ணிலா எசன்ஸ்- பத்து சொட்டுக்கள்
பால் -நூறு மில்லி
கொக்கோ பவுடர்- 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வெண்ணெய் சிறிது எடுத்து வைத்து விட்டு சர்க்கரையை போட்டு நன்றாக குழைக்கவும் முட்டையை உடைத்து அடித்து கலவையில் விட்டு கலந்து கொள்ளுங்கள் பேக்கிங் பவுடர் கொக்கோ பவுடர் இவற்றை சலித்து கலவையில் போட்டு பால் விட்டு பிசையுங்கள் கேக் தட்டை எடுத்து வெண்ணெய் தடவி பிசைந்த மாவை தட்டில் உயரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு சமமாக பரப்பி அவனில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்
இப்போது சுவையான சாக்லேட் கேக் தயார்