Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊக்கத்தொகை வழங்க வேண்டும்…. பணியாளர்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஊக்கத் தொகையை வழங்க கோரி நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்திருந்த 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க கோரி கிராம ஊராட்சிகளில் வேலை பார்க்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மாநில இணை செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றி உள்ளனர். அதன்பின் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம்  கோரிக்கை அடங்கிய மனுவை அவர்கள் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இவற்றில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |