இந்திய சந்தையில், ரியல்மி நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில், ரியல்மி நிறுவனம் சத்தமே இல்லாமல் புதிய வயர்லெஸ் மவுஸ் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இது ‘வயர்லெஸ் மவுஸ் – சைலண்ட்’ (Wireless Mouse – Silent) என்று அழைக்கப்படுகிறது. கிளிக் செய்யாத நேரங்களில் பெயருக்கேற்றார்போல், இந்த மவுஸ் சத்தமில்லாமல் செயல்படுகிறது.. இதனுடைய வடிவமைப்பை பார்த்தோம் என்றால் அனைவரது உள்ளங்கைகளிலும் கன கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இதனுடைய எடை வெறும் 62 கிராம் தான்.. ஒற்றை ஏ.ஏ. பேட்டரி மூலம் சக்தியூட்டிக் கொள்ளக் கூடிய இந்த புதிய வயர்லெஸ் மவுஸ் 800, 1200 அல்லது 1600 டி.பி.ஐ. அட்ஜஸ்மெண்ட் (D.P.I. Adjustment) வசதியை கொண்டுள்ளது. லேப்டாப், கம்ப்யூட்டர்களில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்குவதற்கு 2.4 ஜிகாஹெர்ட்ஸ் டாங்கில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மவுஸ் அதிகபட்சமாக 8 மாதங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்ககூடியது. இந்த மவுஸ் சைலண்ட் பிளாக் மற்றும் எல்லோ என 2 கலர்களில் கிடைக்கிறது. இது ரியல்மி வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைப்பதால், வாங்கி பயன்படுத்துங்கள்.. இதனுடைய விலை ரூபாய். 799 ஆகும்..