Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் இல்லை…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் பொது வங்கியான எஸ்பிஐ வடிக்கையாளர்களின் பணத்திற்கு முழு உத்திரவாதத்தை அளிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் சமீபத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க புதிய விதிமுறையை கொண்டு வந்தது. ஏடிஎம்களில் நடைபெறும் பண மோசடிகளை தடுக்கும் விதமாக ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்கும்போது OTP கட்டாயமாகும். நீங்கள் பணம் எடுக்க முயற்சி செய்யும்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிட்டால் மட்டுமே தொகையை எடுத்துக்கொள்ள முடியும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

எஸ்பிஐ வங்கியானது யோஜனா செயலியை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் ஆகிய வேலைகளை யோனோ செயலி மூலமாக எளிமையாக வீட்டிலிருந்தே செய்யலாம். இதையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவையை ஊக்குவிக்கும் அடிப்படையில் 5 லட்சம் ரூபாய் வரை IMPS பரிமாற்றத்திற்கு இனிமேல் எந்த விதமான சேவை கட்டணம் கிடையாது. அத்துடன் டிஜிட்டல் IMPS சேவை 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இதில் IMPS சேவையானது இணையதள வங்கி, மொபைல் பேங்கிங், யோஜனா செயலி ஆகியவற்றில் மட்டும் அளிக்கப்படுகிறது. MPS சேவையை வங்கி கிளையில் மேற்கொண்டால் அதற்கு ஜிஎஸ்டி உடன் சேவை கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் 1000 முதல் ரூ.10,000 வரை செலுத்தும் பணத்திற்கு கட்டணமாக 2 ரூபாய்+ ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை 4 ரூபாய் + ஜிஎஸ்டி, அதேபோன்று ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 வரை 20 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதே கட்டணம் ஆன்லைனிலும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இலவசமாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |