இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர்ந்து திருடிவந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர் .
சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி துறைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது இரு சக்கர வாகனம் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து பள்ளிகரணையைச் சேர்ந்த பவித்திரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது இதனையடுத்து பவித்ரன் திருடி வைத்திருந்த சுமார் 8 லட்சம் மதிப்புள்ள ஐந்து இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர்