Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என் பொறுப்பில் தான் இருக்கு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி. அலம்பலம் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் அறுவடை இயந்திரத்தை வரதன் தனது பொறுப்பில் ரவி என்பவரின் நிலத்தில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்.

அப்போது விஜயகுமார் என்பவர் ரவியின் நிலத்தில் இருந்த நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது வரதன் இயந்திரத்தை ராமர் எனது பொறுப்பில் விட்டு சென்று இருப்பாதாகவும், அவர் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்லுங்கள் என விஜயகுமாரிடம் கூறியிருக்கிறார்.

இதை சிறிதும் பொருட்படுத்தாத விஜயகுமார் இயந்திரத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். அந்நேரம் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கிய வரதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |