‘சினோபார்ம்’ கொரோனா தடுப்பூசி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் ‘சினோபார்ம்’ தடுப்பூசி மூன்று மாதங்களில் செயல்திறனை இழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மற்ற கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் குறைய கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும்.
இலங்கையில் பெரும்பாலான மக்களுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசி தான் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்நாட்டில் மக்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.