Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்துகளில்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நமது பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வரவுள்ள நிலையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளி ஊர்களில் வேலை செய்பவர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள். இந்நிலையில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளதால்  மக்கள் சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16ஆம் தேதி முதல் விரைவு பேருந்துகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வருகின்ற 9ஆம் தேதி பேருந்துகள் இயங்காது என்பதால் முன் பதிவு செய்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |