Categories
உலக செய்திகள்

விரைவில் பூமியை கடக்க உள்ள பேராபத்து….. நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித்தகவல்….!!

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் விட 2.5 மடங்கு உயரமுள்ள சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் ஒன்று இந்த மாதம் பூமியை கடக்க உள்ளதாக நாசா தகவல் தெரிவித்து உள்ளது. இந்த சிறுகோளின் அளவு அதிகமாக இருப்பதாலும் மற்றும் பூமிக்கு மிகவும் அருகில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாலும் இது அபாயகரமான சிறுகோள் என நாசாவால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருக்கும் இந்த சிறுகோளின் தற்போதைய நகர்வில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தால் கூட அது பூமியில் மோதும் அபாயம் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

சிறுகோள்கள் என்பவை வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பெரிய பாறைகள் போன்றவையாகும். இவை சூரியனை சுற்றி வருகின்றன, . இந்த விண்வெளிப் பாறைகள் ஏதேனும் ஒரு கிரகத்துடன் மோதும் போது அது பேரழிவை உண்டாக்கும். அதனால்தான், 150 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் பூமியை நெருங்கினாலும், நாசா அதை அபாயகரமான சிறுகோள் என்று கூறி தீவிரமாக கண்காணிக்கிறது. இருப்பினும் (7482) 1994 PC1 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் நம் கிரகத்தை பாதுகாப்பாக கடந்து செல்லும் என நம்புவோம், என்று விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

தற்போது அபாயகரமானது என்று கூறப்படும் உள்ள இந்த சிறுகோள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஆகஸ்ட் 9, 1994 அன்று ராபர்ட் மெக்நாட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. EarthSky-யின் கூற்றுப்படி இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் நேரம் ஜனவரி 18, 2022 அன்று மாலை 4:51 மணிக்கு EST அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 19 காலை 3.21 மணிக்கு ஆகும். இந்த சிறுகோள் பூமியுடன் ஒப்பிடும் போது மணிக்கு 43,754 மைல்கள வேகத்தில் நகர்கிறது.பூமியிலிருந்து 1.2 மில்லியன் மைல்கள் தூரத்தில் பூமியை கடக்கும். இந்த தொலைவு பாதுகாப்பானது என்றாலும் கூட தொலைநோக்கி மூலம் கவனிப்பது சற்று கடினம் என கூறப்படுகிறது. விரைவில் பூமியை கடக்க உள்ள சிறுகோள் (7482) 1994 PC1 தவிர வேறு பல சிறுகோள்களும் ஜனவரி மாதத்தில் பூமியை கடக்க உள்ளது. 5 சிறுகோள்கள் பூமியை நோக்கி வரவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Categories

Tech |