Categories
உலக செய்திகள்

இறந்தே பிறந்ததாக கூறப்பட்ட குழந்தை…. அடக்கம் செய்யும் போது காத்திருந்த அதிர்ச்சி….!!

துருக்கியில் இறந்து பிறந்ததாக கருதப்பட்ட குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று, துருக்கியில் வசித்து வரும் Melek Sert (32) என்ற கர்ப்பிணிப்பெண், கடுமையான வயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு காரணமாக Adana என்ற இடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கணவனுடன் சென்றிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜனவரி 2 ஆம் தேதியன்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தை இறந்தே பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் குழந்தைக்கு இறப்புச் சான்றிதழையும் கொடுத்து, குழந்தையின் தந்தை கையில் இறந்த உடலை வைக்க சிறு பையும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை கனத்த இதயத்துடன் அந்தக் குழந்தையை அடக்கம் செய்வதற்காக தனது காரில் எடுத்துச் சென்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தையை அடக்கம் செய்ய ஒரு சிறு குழி கூட கல்லறையில் தோண்டப்பட்டுவிட்டது.இதனைத் தொடர்ந்து இறந்ததாக கருதப்பட்ட குழந்தையை கல்லறையை நோக்கிச் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென எதிர்பாராத விதமாக வீறிட்டு அழத்துள்ளது. உடனடியாக, மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த குழந்தை ஒரு குறைமாதக் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |