Categories
அரசியல்

“தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது”…. திமுக குற்றச்சாட்டுக்கு பாஜக விளக்கம்….!!

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுக அளித்த புகாருக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது மற்றும் இது தொடர்பாக முறையிட மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க முடியவில்லை என்று திமுக தரப்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாஜக தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது, பலகட்ட ஆலோசனைக்கு பின் தான் மாநில பேரிடர் நிவாரண நிதி முடிவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் செலவிடப்படாத நிதி மறுவருட கணக்கில் வைக்கப்படும். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பது கூட தெரியாமால் சிலர் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என விமர்சித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார், மேலும் தேசிய, மாநில பேரிடர் நிவாரண நிதியானது, பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைக்காக செலவிடப்பட வேண்டும்

மேலும் இந்த நிதியானது பயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம் போன்றவைகளுக்கு பொருந்தாது. என்பதை மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சாலைகள், கட்டுமானங்கள், கட்டமைப்புகளை மறு சீரமைத்தல் போன்றவைகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை செலவிட முடியாது. சீரமைப்புகளுக்கான நிதியானது, அந்தந்த துறைகளின் நிதிநிலை மூலம் ஒதுக்கப்படும். உதாரணத்திற்கு, மின் துறை சார்ந்த செலவினங்கள் அந்த துறையின் ஆண்டுக்கான நிதி நிலை ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் கூறினார். அதே போல் விவசாய துறையில் ஏற்படும் இழப்புகள், காப்பீடு தவிர்த்து மற்றவை வேளாண் துறையிலிருந்து ஒதுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் மாநிலஅரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இடம்பெற முடியாத செலவினங்களை மத்திய அரசிடம் கேட்பது, அதன் பின் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது என்று கூறியுள்ளார்.மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது வரையறைக்குள் மட்டுமே மக்களின் அவசர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட நிதியம் என்பதை உணரவேண்டும் என்றார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் நிதி வழங்கப்படுகிறது.

Categories

Tech |