ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் 35 வயது மிக்க வாலிபரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ஜெயசீலன் என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயசீலன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டதும் திருப்பத்தூரின் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் ஜெயசீலனின் உடலை ரயில்வே காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.