Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பொங்கல் போனஸ்…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அந்தவகையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு இந்த வருட பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 7,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் தாராபுரத்தில் அரசு ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினார். இதில் தாராபுரம் வட்ட கிளை நிர்வாகிகள் நவீன், பாலராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வகையில் ஆர்ப்பாட்டத்தின் முதன்மை கோரிக்கையாக பொதுத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை போனஸ் 7,000 ரூபாய் வழங்கியது போல, அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக தடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினர். மேலும் அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |