Categories
தேசிய செய்திகள்

பெரும் ஆபத்து! தமிழகம் உட்பட 9 மாநிலங்களுக்கு….. மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. 325 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,630 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அஹீஜா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைகள் பெரிதும் குறைந்திருக்கிறது.

போதிய அளவில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை எனில், உண்மையான ஒமைக்ரான் நிலவரத்தை கண்டறிய முடியாது. ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. அதனால் ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனைகள் செய்ய வேண்டும். எனவே பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு தேவையான கிட்டுகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும் பரிசோதனை ஆய்வகங்கள், உபகரணங்கள், ஊழியர்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |