Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது…. சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள்…. யுபிஎஸ்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் 2021 – ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடைபெறுமா என தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று தொடங்குவதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக யுபிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்று சூழலை கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. அந்தவகையில் ஜனவரி 7 ,8,9 மற்றும் 15,16-ம் தேதிகளில் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மெயின் தேர்வு 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மெயின் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் அடையாள அட்டை மற்றும் ஹால்டிக்கெட்டை பரிசோதித்து அவர்களை அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |