Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-மொபட் மோதலில்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் தங்கவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி அமுல்ராணியுடன் சேர்ந்து அப்பகுதில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களது மகன் மணிகண்டன் பரமத்திவேலூரை அடுத்த பெரியகரசப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கவேல் மற்றும் அமுல்ராணி மகனை பார்பதற்காக பெரியகரசப்பாளையத்திற்கு சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது பரமத்திவேலூர்-நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்த போது பரமத்திவேலூரை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அமுல்ராணி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே தங்கவேலுவும் உயிரிழந்துள்ளார். இதனையறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் கணவன்-மனைவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதிய கார் டிரைவரான பெங்களூரை சேர்ந்த மகேஷ் என்ற வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |