கனடாவில் கொரோனாவின் 5 ஆவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் பொதுமக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனா மீண்டும் மீண்டும் உரு மாறி உலக நாடுகளுக்கு பரவுவதால் அனைவரிடத்திலும் இது தொடர்பாக பெரும் அச்சம் எழுந்துள்ளது.
இந்த கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இந்நிலையில் கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவின் 5 ஆவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதனை விரைந்து போட்டுக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் உணவகம் உட்பட பல முக்கிய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.