ஸ்விட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் ஊழியர்களுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நிபுணர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வாரந்தோறும் 45% க்கும் மேலாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் தனிமையில் இருந்ததல் என்ற பெயரில் வீட்டில் முடங்கியுள்ளார்கள்.
இதனால் அந்நாட்டில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்து சென்றால் சுகாதாரத் துறையும் வேலைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி அரசாங்கம் இந்த பிரச்சனையில் தலையிட்டு அதிரடியாக தீர்வு ஒன்றை எடுக்காவிட்டால் சுவிட்சர்லாந்து மிக மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.