தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது.
கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.