தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக சட்ட மன்ற உறுப்பினர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு நாகை, சாமந்தான்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.