Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் நான்கு நாட்கள் மூடப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் மதுபானம் விற்பனை இல்லா தினமாக அனுசரிக்கப்பட இருக்கிறது.

எனவே ஜனவரி 15,18,26 ஆகிய தினங்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வருகின்ற 9ஆம் தேதி முழு உறடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் அடைக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |