Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அம்மா உணவகம் மூடப்படுமா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.இந்த பேரவையின் நிறைய விவாதங்கள் நடைபெற்றது.

அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. நேற்று முன்தினம் ஆளுநர் ஆற்றிய உரையில் முக்கிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். அதில் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எதிர்கால தமிழகம் எல்லாவகையிலும் உயர்வடைய நாம் உறுதி ஏற்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும் அரசு சார்பிலும், மனமார்ந்த நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அம்மா உணவகம் மூடப்பட கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |