Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அவள் என்ன விட்டு போயிட்டா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |