கர்நாடக மாநிலத்தில் நடுரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் ஆனேக்கல் பகுதியில் உள்ள ஒரு நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி விட்டு இரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆனேக்கல் பகுதியில் இவரது காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நடுரோட்டில் வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.