ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை 1966-ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 லட்சம் பணம் முதலீடு செய்து துவங்கினார். தற்போது பல கோடி ரூபாய்க்கு வருமானம் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ், துணி, சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்து வருகிறது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் டன்சோ நிறுவனத்தில் 1,488 கோடியை முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிறுவனத்தின் 25.8 சதவீத பங்குகளை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் டன்சோ நிறுவனம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.