ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவர் இந்திய அளவில் மிகச்சிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழ்ந்து வருகிறார். பட்நாயக் பல்வேறு சூழல்கள் குறித்த விழிப்புணர்வு சிற்பங்களை அவ்வப்போது பல்வேறு கடற்கரைகளில் உருவாக்கி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அந்த மணல் சிற்பம் வலியுறுத்துகிறது.