பிரபல நடிகரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
நடிகர் உன்னி முகுந்தன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருபவர். மேலும், இவர் நடிப்பதை தவிர்த்து படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அந்த வகையில், இவர் ‘மேப்படியான’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதனையடுத்து ,இந்த படத்தை தயாரிக்க இவருக்கு பணம் எங்கிருந்து வந்தது என இவர் வீட்டில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும், அவரின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து நடிகர் உன்னி முகுந்தன் கூறியதாவது, ”தான் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அவர்கள் கேட்ட விபரங்களை எல்லாம் அளித்ததாகவும்” கூறியுள்ளார். இந்நிலையில், இவரின் வீட்டில் இருந்து எதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனையால் மலையாள திரையுலகில் பரபரப்பு நிலவியது.