தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார் என்றும் அண்ணா நூலகத்தை பாழ்படுத்தியது யார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் செம்மொழி பூங்காவில் கருணாநிதி பெயரை மறைத்தது யார் என்றும் பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காகிதம் ஒட்டி மறைத்தது யார் என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.