வாரந்தோறும் நடைபெறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி முட்டைகள் ஏலம் விடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தவறாமல் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற பருத்தி சந்தையில் 240 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்த பொட்டு ரக பருத்தி 549 மூட்டைகள் மற்றும் எல்.ஆர்.ஏ ரக பருத்தி 64௦ மூட்டைகள் என மொத்தமாக 1,089 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
இவற்றில் எல்.ஆர்.ஏ. ரக பருத்தி குறைந்தபட்ச விலையாக 4,079 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 6,405 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்தமாக 27,99,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதை இம்மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வியாபாரிகள் வாங்கி சென்றுள்ளனர்.