Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! பிரபல நாட்டை மூக்கறுத்த தலிபான்கள்….. இதுக்கு எப்போதுமே அனுமதி கிடையாது…. திட்டவட்டமாக கூறிய படைத்தளபதி….!!

பாகிஸ்தான் படைவீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் வேலி அமைப்பதை தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான்களின் படைத்தளபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ படை வீரர்கள் கடந்த மாதம் நிம்ரோஸ்
மாநிலத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டுடனான சர்வதேச எல்லை முள் வேலிகளை அதிகப்படுத்த முயற்சித்துள்ளார்கள்.

இதனை கண்டு ஷாக்கான தலிபான்கள் பாகிஸ்தான் படை வீரர்களின் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதே போல் மற்றொரு முறையும் நங்கர்ஹார் மாநிலத்திலும் நடந்துள்ளது.

இந்த பிரச்சினைகளை தேவையில்லாத சில விஷக்கிருமிகளே உருவாக்குகிறது என்று பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஷா மஃமூத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தலிபான்களின் படைத்தளபதியான சனவுல்லா பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது பாகிஸ்தான் படைவீரர்கள் தங்கள் நாட்டுடனான எல்லையில் வேலி அமைப்பதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |