இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, மாநிலத்தில் கொரோனா பாதித்த 2705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் 403 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 23.17% மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.18% ஆக உள்ளது.
மேலும் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் “விரைவில் குணமடையுங்கள்” என்ற வாழ்த்து அட்டைகளுடன் பல கூடையை மாநில அரசு வழங்கி வருகிறது. இதற்கான வினியோக பணிகளை கவுன்சிலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 10,000 பழக் கூடைகள் தயார் செய்யப்பட்டு, கொல்கத்தா முழுவதும் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.