நர்சிங் கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகுரும்பூர் கிராமத்தில் 19 வயது மாணவி தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
ஆதலால் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதற்கிடையில் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.