Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கில் புறநகர் மின்சார ரயில் சேவை…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் மின்சார ரயில் சேவை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 4 வழித்தடங்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பொது இடங்களில் 300 ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கம் போல் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரயில் சேவை நடைபெறும். ரயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

டிக்கெட் வழங்குவதில் எந்த நடைமுறை மாற்றமும் செய்யப்படவில்லை. கொரோனா முன்களப்பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக் கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ள கூடியவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |