தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இனி வரும் காலங்களில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு முறையானது டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை காலிப்பணியிடங்களை இனி டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளது.