பிரான்சில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் 334 நபர்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து பாரிஸ் நகரத்தின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறியதாவது, “நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்து நடக்கும் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.
இரு வாரங்களில், கொரோனா தொற்று மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தான்” என்று கூறியிருக்கிறார்.