தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது புதிய கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி. சுரேஷ்குமார் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாநகர பகுதியில் இரவு ஊரடங்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இரவு 10 மணிக்கு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க வேண்டும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்லும்போது 10 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.