கர்நாடகா மாநிலம் மாண்டியா அருகில் உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் மாணவி செல்போனைக் கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த தலைமையாசிரியர் சினேகலதா மனைவி தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பரிசோதனை என்ற பெயரில் ஆடையை களைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மிகவும் மோசமாக நடந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து தலைமையாசிரியரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. எனவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.