உலகளவில் கடந்த வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா மீண்டும் மீண்டும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொதுமக்கள் அச்சத்திலுள்ளார்கள்.
இதனை தடுக்க உலக நாடுகள் பல முயற்சிகளை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரத்திற்கான கொரோனா நிலவர தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த வாரத்தில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளது.