நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பூ, பழம் விற்பனை நடைபெற்று வரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி முதல் சந்தை வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.