Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து…. 5-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. விருதுநகரில் பரபரப்பு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்த முனியசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.

Categories

Tech |