நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 140 -ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று தொற்று உறுதியானவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பிற்கான அறிகுறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் தொடர்பிலிருந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.