அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்களை கொண்ட அணியை ஆஸ்திரேலியாவெளியிட்டுள்ளது.!
2020 ஜனவரியில் நடக்கவிருக்கும் ஒரு நாள் தொடருக்கான பதினான்கு பேரைக் கொண்ட அணியினை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்தியவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அதிகளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காரணம் என்னவெனில் இத்தொடர் உலக கோப்பை போட்டிக்கு பின் 6 மாத இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் ஒருநாள் தொடராகும்.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஒருநாள் போட்டியினை உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக விளையாடியது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து இப்போது முக்கிய 7 மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி.
இம்மாற்றத்தில் குறிப்பிடும் வகையில்., முன்னணி வீரர்களான க்ளென் மேக்ஸ்வெல், நாதன் லியோன், ஒஸ்மான் குவாஜா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை. மேலும் , டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம்வரும் மார்னஸ் லாபூஷனுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜோஷ் ஹேசில்வுட்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆரோன் பிஞ்ச் தலைமையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன்களாக அலெக்ஸ் கேரி மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுளது. ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆடம் ஜம்பா மற்றும் ஆஷ்டன் அகர் என்று 2 சுழற்பந்து வீச்சாளர்ளும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியினுடைய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்த தொடரில் அணியுடன் இருக்க மாட்டார்.அதற்கு மாற்றாக ஒருநாள் தொடருக்கு, ஆண்ட்ரூ மெக்டொனால்டை தலைமை பயிற்சியாளராக இருப்பர் என்று ஆஸி அணி அறிவித்துள்ளது.