கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அதிக பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், தமிழக அரசினால் தற்போது மாநிலம் முழுவதும் ஜனவரி 9 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து மற்றும் உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், இது குறித்து தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், ஜனவரி 9 மு.ப மற்றும் பி.ப (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (அறிவிக்கை எண்.16/2021, நாள் 20/10/2021) எழுத்துத்தேர்வு மட்டும் ஜனவரி 11 அன்று மு.ப மற்றும் பி.ப நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் ஜனவரி 9 மு.ப மற்றும் பி.ப நடைபெறுவதாக இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நுழைவுச்சீட்டினையே உபயோகித்து, ஜனவரி 11 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெறும் தேர்வினை, நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அதே தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜனவரி 8 மு.ப மற்றும் பி.ப நடைபெற இருந்த தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை/ திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி அதே நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.