Categories
சினிமா

நீங்க மட்டும் தா ஆடுவீங்களா….! நாங்களும் ஆடுவோம்…. சமந்தாவை தொடர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை…..!!

ஆச்சார்யா படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகை ரெஜினா கஸன்ட்ரா குத்தாட்டம் போட்டுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்பாக இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. புஷ்பா படம் வெளியான போது சமந்தாவின் பாடலை காண்பதற்கே ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

இந்நிலையில் சமந்தாவை போல் நடிகை ரெஜினாவும் பாடலுக்கு ஆடி பட்டையை கிளப்பியுள்ளார்.புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றீயா’ பாடல் போன்றே சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. சான கஷ்டம் என்ற அந்தப் பாடலுக்கு சிரஞ்சீவியுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் ரெஜினா. இந்த பாடல் தெலுங்கு மாநிலங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ளனர். சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வாலும், ராம் சரண் ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 4 ஆம் தேதி சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியாகும் அதேநாள் ஆச்சார்யாவும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |