சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுமார் 250 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Categories