Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அவர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை படி, போக்குவரத்துப்படி, கல்விப்படி  உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்டு வரும் சலுகைகளில், அகவிலைப்படி வருடந்தோறும் உயர்த்தப்படும்.

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச் செலவிற்கு வழங்கப்படும் கல்விப்படி இந்த ஆண்டு உயர்த்தி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டால் இதுவரை வழங்கப்பட்டு வரும் கல்விப்படி 2,250 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய கல்வி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், சுமார் 18 மாதங்களாக நிலுவையில் இருந்துவரும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊதிய உயர்வு தகவல் அனைத்து மத்திய அரசு பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |