டெல்லி உள்ள திகார் சிறை அலுவலர்கள் கடந்த ஜனவரி 5ஆம் தேதி திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது விசாரணை கைதி ஒருவர் தன்னிடம் வைத்திருந்த செல்போனை அச்சத்தில் விழுங்கிவிட்டார். இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறியது, ஜனவரி 5ஆம் தேதி சிறை எண் 1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே சோதனை செய்வதற்காக சென்றபோது அவர் செல்போனை விழுங்கி விட்டார். அவர் டிடியு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. ஆனால் மொபைல் இன்னும் வெளியே எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.