Categories
அரசியல்

இதுயென்ன புது ட்விஸ்ட்…. “படாரென ராஜினாமா கடிதத்தை நீட்டிய பிடிஆர்”…. ஸ்டாலினின் ரியாக்‌ஷன் என்ன?…!!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற போது பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சராக பதவியேற்ற அவருக்கு சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ளது. மிகப் பொருத்தமான நபர்களை தேர்வு செய்தததற்கு ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன.
ஆனால் தற்போது பழனிவேல் தியாகராஜன் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் கடிதம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கட்சி வட்டாரத்தில் கூறுவதாவது. “துறை ரீதியாக திறமை வாய்ந்தவர் பிடிஆர். முதல்வர் ஸ்டாலினுக்கும் அதில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர் அதிரடியாக பேசியது கட்சிக்கு வெளியேயும், கட்சிக்கு உள்ளேயும் அவருக்கு எதிராக அவ்வப்போது திரும்புகிறது.இதேபோல் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், கட்சியின் சீனியர்கள் சிலர் ஆகியோருக்கு பிடிஆர் மீது நல்ல எண்ணம் இல்லையாம்.அத்துடன் அவர் செயலாளராக இருக்கும் ஐடி விங்குக்கு ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரனை கொண்டு வந்ததும் பிடிஆருக்கு பிடிக்கவில்லை. எந்த அணிக்கும் ஆலோசகர் கிடையாது. அப்படியிருக்க ஐடி விங்குக்கு மட்டும் ஆலோசகர் நியமிப்பது தனது பவரை குறைக்கும் முயற்சி என பிடிஆர் நினைப்பதில் எந்த தவறும் இல்லையே.இதனால் தனது எதிர்ப்பை காட்டும் விதமாக பிடிஆர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்” என்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு கட்சி நிர்வாகிகள் இவ்வாறு பதில் அளித்தனர். அதாவது, “முன்னதாக பிடிஆர் சமூக வலைதளங்களில் காரசாரமாக எதிர்வினையாற்றிக் கொண்டிருந்த போது முதல்வர் அழைத்துப் பேசினார். துறை ரீதியான செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் யாருக்கும் சமூக வலைதளங்களில் பதிலளிக்க வேண்டாம் என்று கூறினார். அதையே தான் இப்போதும் ஸ்டாலின் சொல்வார். ஐடி விங் வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். நீங்கள் துறை சார்ந்த பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் அனுபவமும், திறமையும் முழுதாக வெளிப்பட்டு நிதி நிலைமை விரைவில் மாற வேண்டும் என கூறுவார்” என்கிறார்கள் திமுக கட்சியினர்.

Categories

Tech |