சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காசியாபிள்ளை பகுதியில் சில்லறை வியாபாரியான முகமது ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் காசியாபிள்ளை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த முகமதுஹரிஷை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் முகமதுஹரிஷ் சட்டவிரோதமாக 14 கிலோ குட்காவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகமதுஹரிஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 14 கிலோ குட்கா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.