Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ இல்லாம இருக்க முடியல…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த சோகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வீரணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் வீரணன் தனது மூத்த மகன் ஆண்டிச்சாமி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி இறந்ததால் வீரணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வருசநாடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் வீரணன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |